• Sep 20 2024

பிரபல இயக்குநரின் வெப் சீரியலில் நடிக்க 1கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய ஹன்சிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இது தவிர தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மாப்பிள்ளை திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீய வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, வேட்டை மன்னன், ரோமியோ ஜுலியட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அத்தோடு இவரது 50 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா. இந்தத் திரைப்படத்தில் சிம்புவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் விரைவில் வெளிவரக் காத்திருக்கின்றது.

இதனையடுத்து நடிகை , ஹன்சிகா தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக 1 கோடிக்கு மேல் சம்பளம் வங்கியுள்ளாராம்.இந்த வெப் சீரிஸ் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கவுள்ளாராம்.வித்தியாசமான கதையில் இந்த வெப் சீரியல் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதில் ஹன்சிகா நடிப்பதற்காக ஒரு பெரிய ஓடிடி நிறுவனம் 1கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்துள்ளதாம். மேலும் பட வாய்ப்புகள் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹன்சிகாவிற்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement