குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை ஹன்சிகா தமிழில் ஜெயம் ரவி நடித்த ’எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ’மாப்பிள்ளை’ ’வேலாயுதம்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’சிங்கம்-2’ ’பிரியாணி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் தற்போது அவர் ஆறு படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகையாக உள்ளார் . இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது பிசினஸ் பார்ட்னர் சோகேல் கதுரியா என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனது காதலனுடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதாவது ஹன்சிகாவுக்கு இவரது கணவன் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றார். இது குறித்த புகைப்படங்களை ஹன்சிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!