• Sep 20 2024

முன்னாள் காதலன் சிம்பு குறித்து ஹன்சிகா வெளியிட்ட அறிக்கை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஹன்சிகா.

இவர் தமிழில் விஜய் ,சூர்யா, கார்த்தி, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா.

இவ்வாறுஇருக்கையில் இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் 50-வது திரைப்படமாக வெளிவந்துள்ள மஹா திரைப்படத்தில் அவரின் முன்னாள் காதலனான சிம்புவும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹன்சிகா தற்போது அவரின் மஹா திரைப்படம் வெளியாகியுள்ளது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அதில் நடிகர் சிம்பு குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி “இப்படத்திற்காக எனக்கு முழு ஆதரவு அளித்த எனது இனிய நண்பன் STR-க்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement