• Sep 21 2024

குட்டிக் கவுணில் தனக்குத் தானே அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹன்சிகா ..வைரலாகும் வீடியோப் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் பல சீரியல்கள் நடித்து தனது நடிப்பை தொடங்கியவர். அதனைத் தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு 'தேசமுத்துரு' என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

இவ்வாறாக பல மொழிகளிலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகி என்ற அந்தஸ்த்தைக் கொடுத்த முதல் படம் என்றால் அது தனுஷுடன் அவர் நடித்த 'மாப்பிள்ளை' என்ற படமே. அதனைத் தொடர்ந்து விஜய், ஜெயம்ரவி, சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துப் பல வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கின்றார்.

இவரின் நடிப்பிற்கும், அழகிற்கும் என்றே ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

மணமகன் தென்னிந்தியாவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் தான் ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் இது எந்தளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

இந்த நிலையில் நாளைய தினம் அவரது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கின்றார் ஹன்சிகா. இதனை முன்னிட்டு தனக்கு தானே முன் கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவொன்றினை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். இதில் அவர் குட்டியான ஒரு கவுண் அணிந்து கையில் பலூனுடன் காட்சி அளிக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement