தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லிங்குசாமி.
இவர் இதனைத் தொடர்ந்து ரன் சண்டைக் கோழி ,பீமா, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கின்றார்.
ரன் படத்துக்கு பிறகு லிங்குசாமிக்கு கிடைத்த மிக பிளாஸ்டர் ஹிட் படமாக சண்டைக்கோழி காணப்பட்டது. ஆனாலும் சண்டைக்கோழி 2 வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து வெளியான படங்கள் படுதோல்வி சந்தித்தது.
சியான் விக்ரமை வைத்து இயக்கிய பீமா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து பையா படமும் சுமாராகத் தான் ஓடியது.
அது போலவே அஞ்சான் திரைப்படம், விஷாலின் சண்டைக்கோழி 2 ஆகியவை எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
இறுதியாக ராம் பொத்தினேனியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தி வாரியர் என்னும் படத்தை இயக்கி கம்பேக் கொடுக்க நினைத்தார். ஆனாலும் அதுவும் சொதப்பலானது.
இந்த நிலையில், தற்போது மகாபாரதக் கதையை மையப்படுத்தி பிரம்மாண்டமான ஒரு இதிகாச படத்தை இயற்றப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, அண்மையில் ஹனுமான் திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்ததோடு 300 கோடி வரையில் வசூலையும் ஈட்டி கொடுத்தது.
இதைத்தொடர்ந்து பல இயக்குநர்களும் இதிகாசப் படங்களை, மகாபாரத கதைகளையும் படமாக்க முண்டியடித்து வருகிறார்கள்.
அதன்படி, ராமாயண கதையை வைத்து ரன்பிக் கபூர் ஒரு படம் நடிக்க உள்ளார். அது போலவே கர்ணன் கதையை வைத்து சூர்யாவும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.
இவ்வாறான நிலையில் லிங்குசாமி மகாபாரதக் கதையை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாராம். விரைவில் அந்த படத்திற்கான அப்டேட்கள் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
Listen News!