• Nov 19 2024

ஹனுமன் ஒரு கடவுளே இல்லை... வசனகர்த்தாவின் பேச்சால்... மீண்டும் சர்ச்சையில் 'ஆதிபுருஷ்'...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'. ஓம் ராவத் இயக்கிய இப்படமானது இராமாயணத்தை மையமாக கொண்டமைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஆதிபுருஷ் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. 


அந்தவகையில் இப் டத்தில் இடம் பெற்ற வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற வசனங்களை மாற்ற படக்குழு முடிவெடுத்தது. இருப்பினும் இது குறித்த சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து மிரட்டல்களும் வந்தன. 


இதனையடுத்து ஆதிபுருஷ் படத்திற்கு வசனம் எழுதிய மனோஜ் முன்டாஷிர் சுக்லா வீட்டுக்கு மும்பை காவல்துறை பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தற்போது மனோஜ் முன்டாஷிர் சுக்லா மீண்டும் சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார். அந்தவகையில் பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில் "ஹனுமான் கடவுள் அல்ல, அவர் ஒரு பக்தர் மட்டுமே. அவர் ராமரைப் போல  தத்துவ ரீதியாக என்றுமே பேசியதில்லை. மேலும் ராமர் மேல் இருந்த பக்திக்கும், அதன் சக்திக்கும் தான் ஹனுமனை நாம் கடவுளாக ஆக்கியுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த விஷயமானது இந்துக்கள் உட்பட பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மனோஜின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement