• Sep 20 2024

ஹப்பி பேர்த்டே டா தம்பி- மகனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன்.இவர் தன்னுடைய கடின உழைப்பால் டாப் ஹீரோவாக வளர்ந்து நிற்கின்றார். இவரது நடிப்பில் தற்பொழுது மாவீரன் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.


 மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகன் தாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகி வருகின்றன. 


சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராத்யா என்கிற மகள் உள்ள நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அவரது மனைவி ஆர்த்திக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தன் தந்தையின் நினைவாக குகன் தாஸ் என பெயர் சூட்டினர்.


மகன் குகன் தாஸ் பிறந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று அவரது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ‘ஹாப்பி பர்த்டே டா தம்பி’ என குறிப்பிட்டு, தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்த கியூட்டான பேமிலி போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்


அதில் மகனுடன் சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடும் போது எடுக்கப்பட்ட கேண்டிட் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் பதிவிட்ட இந்த சர்ப்ரைஸ் போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் குகன் தாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு அந்த  புகைப்படத்தை சிவகார்த்திகேயன் பதிவிட்ட 30 நிமிடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து இன்ஸ்டாகிராமில் படு வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement