• Sep 20 2024

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார்- அண்ணன் தம்பி பாசத்தை மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான தனுஷ் இன்றைய தினம் தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.இவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி ட்வீட் போட்டு வருகின்றனர்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் தி கிரே மேன். நெட்பிளிக்ஸில் வெளியாகிய இப்படம் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதன் அடுத்தடுத்த பாகங்களிலும் அவிக் சான் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகர் பிரசன்னா உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார்.. இந்த ஆண்டு இனிதாக அமையட்டும்" என வாழ்த்தி டுவீட் போட்டு இருக்கிறார்.

தனுஷின் '3' படத்தில் ஆரம்பித்த அண்ணன் தம்பி உறவு, எதிர்நீச்சல், காக்கிச் சட்டை என தொடர்ந்த உறவு என்றுமே அதே போல நீடித்துக் கொண்டே இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட்டை கொண்டாடி வருகின்றனர். இருவருக்கும் இடையே பிரச்சனை, பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று வெளியான தகவல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement