• Sep 21 2024

’ ஹேப்பி பர்த்டே சூர்யா' .. சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிப்பின் நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸை  ட்ரீட்டாக கொடுத்துள்ளார்.

நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவின் குடும்பமே சினிமா குடும்பமாக உள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் சம்பாதித்த சொத்து மற்றும் அவரது சொகுசு வாழ்க்கை குறித்த தகவல்களை இங்கே காணலாம் பார்க்கலாம்.

1975ம் ஆண்டு பழம்பெரும் நடிகர் சிவகுமாருக்கு மகனாக பிறந்த சூர்யா 1997ம் ஆண்டு விஜய்யின் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். காதலே நிம்மதி படத்தில் ஹீரோவாக நடித்த சூர்யா ஆரம்பத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டதும், அதற்காக மோசமான விமர்சனங்களையும் பெற்றார். ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பது போல தொடர்ந்து முட்டி மோதி சினிமாவை கற்றுக் கொள்ள முயற்சி செய்த சூர்யா பாலாவின் நந்தா, பிதாமகன் படங்களில் நடிப்பின் நாயகனாகவே மாறிவிட்டார்.

 ரஜினிகாந்த், விஜய், அஜித் எல்லாம் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில், நடிகர் சூர்யா அதிகபட்சமாக 50 கோடி சம்பளத்தை கங்குவா படத்திற்காக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவுக்கு செலவழிக்கும் ஒரு சில நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். 2டி நிறுவனம் தயாரிப்பில் பல படங்களை தயாரித்தும் அதில், மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பும் வழங்கி வரும் சூர்யாவிடம் ஏகப்பட்ட சொத்துக்களும் உள்ளன.

கடந்த ஆண்டு வரை நடிகர் சூர்யாவிடம் 180 கோடி அளவிலான சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கும் என்கிறார்கள்.

சமீபத்தில், மும்பையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் குடியேறிய சூர்யா அங்கேயும் பல கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.நடிகர் சூர்யாவிடம் 1.3 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் 730Ld, ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆடி Q7, ரூ.60 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் M கிளாஸ், ரூ.1.1 கோடி மதிப்பிலான ஜாகுவார் XJ L போன்ற கார்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement