• Nov 10 2024

அரசியல் வாதியைக் கரம் பிடிக்கவுள்ள பிரபல நடிகை.. அம்பலமாகிய உண்மை.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகையான பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சட்டாவும் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


இருப்பினும் இந்த விடயம் குறித்து இருவருமே எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் கடந்த வாரம் கூட மும்பையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் இருவரும் ஒன்றாக உணவருந்தினர். அத்தோடு இருவரும் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது. 


இவ்வாறாக எத்தனை கிசுகிசு வந்தாலும் இருவரும் எதுவும் சொல்லாது மவுனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பரினீதி சோப்ரா, ராகவ் சட்டாவுக்கு வாழ்த்து சொல்லியுள்ளார் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சீவ் அரோரா.


அந்தவகையில் சஞ்சீவ் அரோரா தனது ட்விட்டர் பக்கத்தில் "பரினீதி சோப்ராவுக்கும், ராகவ் சட்டாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் திருமண இணைப்பு மகிழ்ச்சியானதாக அன்பு நிறைந்ததாக இருக்கட்டும். அவர்கள் என்றென்றும் இணைந்து வாழ என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் அந்தப் பதிவில் பரினீதி சோப்ராவையும், ராகவ் சட்டாவையும் டேக் செய்துள்ளார். இதனால் இலை மறை காய் மறையாக இருந்த பரினீதி, ராகவ் சட்டா காதல் விவகாரம் இப்போது அம்பலமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement