• Sep 20 2024

"தந்தையர் தின வாழ்த்துகள் டாடா- அட்லிக்கு தந்தையர் தின வாழ்த்துத் தெரிவித்த ப்ரியா- எமோஷனல் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இவருடைய முதல் படமே இவருக்க சூப்பர் ஹிட் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் போன்ற படங்களையும் இயக்கி இருந்தார்.


வர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இது தவிர அண்மையில் அட்லி மும்பையில் 38 கோடி ரூபாய்க்கு சொகுசு   ஃப்ளாட்வாங்கியிருப்பதாகவும்,கூறப்படுகின்றது.


இந்நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடுப்படுவதால் ப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்திருக்கும் வாழ்த்தில், "தந்தையர் தின வாழ்த்துகள் டாடா.. மீர், பெக்கி மற்றும் அம்மா உங்களை அதிகம் நேசிக்கின்றோம். நீங்கள் இந்த உலகத்திலே சிறந்த அப்பா" என குறிப்பிட்டிருக்கிறார். அந்த ட்வீட் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.



Advertisement

Advertisement