பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று 09ஆம் திகதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்வுக்காக தென்னிந்தியாவில் இருந்து நடிகை ரம்பா,தமன்னா,கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி, ரச்சிதா என பிரபலங்கள் திரண்டு வருகை தந்திருந்தனர்.
ரசிகர்களின் இடையூறு அதிகமானதால் அங்கு ஏற்பட்ட குழப்பத்தால் பலமுறை இடைநிறுத்தப்பட்டு இறுதியில் இதை தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அதிகளவில் குழுமிய ரசிகர்கள் அங்கிருந்த தடைகளை உடைத்து, போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டுள்ளனர். அது நிகழ்ச்சிக்கு தடையை ஏற்படுத்தியது. அதனால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது . மேலும் இந் நிகழ்ச்சி இடையில் நிறுத்தப்பட்டது பற்றி பலர் பல விதமாக சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் அந் நிலையில் வலைப்பேச்சு ஆனந்த் கூறியுள்ளதை பார்க்கலாம் வாருங்கள் ,
"புலம் பெயர் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள் ஆக்கிய சம்பவம் தான் ஹரிகரனின் மாபெரும் இசைநிகழ்ச்சி , அந்த நிகழ்ச்சியில் நடந்த பல விதமான அசம்பாவிதங்கள் அதையும் தாண்டி உங்க ஊர் ஆட்கள் ஏன் இப்பிடி இருக்கிறார்கள் என்ற கேள்வி ,இப்பிடி ஒரு அவமானம் இந்த நிகழ்வை திட்டமிட்டு நடத்தி இருந்தால் இப்பிடி நடந்து இருக்காது.
ஏன் இப்பிடி ஒரு சம்பவம் நடந்தது , இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், ஒரு திறந்த வெளி அரங்கத்தில் இவ்வளவு பெயர் தான் நிற்க முடியும் என்பதையும் தாண்டி டிக்கெட் கொடுத்தது ஒரு காரணம் , யாழ்ப்பாணம் என்றாலே எந்த நடிகர் நடிகைகளும் வர மாட்டார்கள் , என்று சொன்னார்கள் அதையும் தாண்டி நாங்க கட்டாயப்படுத்தி வர வைத்தோம் என்று சொன்னதும் அது அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் . மற்றும் ஆரம்பத்தில் இலவசமாக பார்ப்பதற்கு அனுமதி என்று சொல்லி விட்டு அதன் பின்னர் மிக கூடிய அளவில் பணம் எடுத்ததும் ஒரு தவறு . இதில் ஒரு முக்கியமான காரணம் தமன்னா போட்ட அந்த எல்லை மீறிய குத்தாட்டம் ஒரு இசைநிகழ்ச்சியில் இவ்வளவு குத்தாட்டம் தேவையில்லை , இதுவும் ரசிகர்களுக்கு முன் போய் நின்று பார்ப்பதற்கு ஒரு காரணம் .
நான் சொல்ல விரும்புவது ஒன்று தான் இப்பிடியான இசைநிகழ்ச்சி நடத்தும் போது பணத்தை எதிர்பார்க்க வேண்டாம் ..
Listen News!