• Nov 19 2024

மாப்பிள்ளைக் களை தெரியுது; எருமை சாணி விஜைக்கு நண்பன் ஹரிஜா போட்ட கமென்ட்

ammu / 1 year ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்தது டிக் டாக் தான். இதில் பலரும் தங்களது நடிப்பு, நடன திறன் மற்றும் ஏனைய திறன்களை வெளிப்படுத்தி வந்தனர். இருந்தும் பாதுகாப்பு தளமில்லை என்று இந்திய அரசு டிக் டாக்கை தடை செய்து விட்டது.


டிக் டாக் செயலியை தடை செய்த பிறகு பலரும் youtube சேனல்களை ஆரம்பித்து விட்டார்கள். இதில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கங்கள் வரை பலரும் வருமானம் பார்த்திருக்கிறார்கள். பலரும் காதல், நட்பு, சமையல், பாசம் என்று பல கண்டன்ட்களை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.


அவ்வாறு தங்கள் திறன்களை வெளிப்படுத்தி சினிமா, சின்னத்திரை போன்றவற்றிற்குள் இணைந்தவர்களும் பலர் இருக்கின்றனர். அப்படி youtube இணையத்தை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர் நம்ம எரும சாணி விஜய். 


இவர் ஹரிஜா என்பவருடன் சேர்ந்து சேனலை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் செய்யும் காமெடி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகியிருந்தது.மேலும், இவர்கள் சோசியல் வீடியோக்களில் காதலன்- காதலிக்கிடையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், கணவன்- மனைவிக்கிடையில் நடக்கும் காமெடிகள் போன்ற வீடியோக்கள் எல்லாம் படு வைரல் ஆகி இருந்தது.


ஹரிஜாவிற்கு திருமணம் முடிந்ததிலிருந்து விஜய் மற்றும் ஹரிஜா தனி தனியாக youtube சேனல் செய்து வருகின்றனர். அதோடு விஜய் அவர்கள் படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் நடிகர் அருள் நிதியை வைத்து d-block என்ற படத்தை விஜய் இயக்கியிருந்தார்.


யூடுயூபரும், இயக்குநருமான விஜய் நக்ஷத்ரா என்பவரை 6 வருடங்களாக காதலித்து திருமணம் முடித்திருக்கிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் தனது instagram பக்கத்தில் பதிவிட்ட திருமண பதிவிற்கு எருமை சாணி ஹரிஜா இருவருக்கும் வாழ்த்து செய்தியை கூறியதோடு "பார்க்கவே வித்யாசமா இருக்கடா விஜய், மாப்பிள்ளை கலையா?" என்று கமன்ட் செய்து உள்ளார்.’




Advertisement

Advertisement