• Nov 15 2024

மேகன் மார்க்லேவால் மீண்டும் சங்கடத்திற்குள் ஆளான ஹரி, நேர்ந்த விபரீதம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

மேகனை பால்மோரலுக்கு அழைத்து செல்வதற்கு இளவரசர் ஹாரி கடுமையாக முயற்சி.ராணி இறந்து 90 நிமிடங்களுக்குப் பிறகு அவர் பால்மோரலின் வாயிலுக்கு வந்த இளவரசர் ஹாரி.ராணியின் இறந்த நாளில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மீதான தகராறு காரணமாக  அரச குடும்பங்களுடன் பால்மோரலுக்குச் செல்லும் விமானத்தை தவறவிட்டதாக தெரிய வந்துள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் மருத்துவர்களால் கண்காணிக்கப்படுகிறார் என்ற தகவல் வெளியானதும், மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் அவருக்கு பக்கபலமாக இருக்க பால்மோரலுக்கு விரைந்தனர்.மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் வில்லியம், இளவரசர் ஆண்ட்ரூ இளவரசர் எட்வர்ட் மற்றும் சோஃபி வெசெக்ஸ் ஆகியோருடன் லண்டனிலிருந்து அபெர்டீனுக்கு RAF விமானத்தின் மூலம் செல்ல திட்டமிட்ட போது, இவர்களுடன் இளவரசர் ஹாரியும் செல்ல திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் தனது மனைவி மேகன் மீதான தகராறு காரணமாக RAF விமானத்தை தவறவிட்ட இளவரசர் ஹாரி, பின் தனி தனியார் ஜெட் விமானத்தின் மூலம் பால்மோரலுக்கு பறந்தார்.இது தொடர்பாக தி சன் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, மேகனை அழைத்து வருவது பொருத்தமானதல்ல என்று மன்னர் சார்லஸ் கூறியதைத் தொடர்ந்து, இளவரசர் ஹாரி விமானத்தை தவறவிட்டதாக தெரிய வந்துள்ளது.மேலும் மேகனை பால்மோரலுக்கு அழைத்து செல்வதில் ஹாரி கடுமையாக முயற்சி செய்ததாகவும், அதற்காக அரச குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனால் அவர் விமானத்தை தவறவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணியின் மரணம் மாலை 6.30 மணியளவில் உலகிற்கு அறிவிக்கப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஹாரியின் தனி விமானம் அபெர்டீனுக்கு வந்தது.

Advertisement

Advertisement