• Sep 20 2024

வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா இத்தனை கோடி சம்பளமாக வாங்கியுள்ளாரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகராக இருந்து வருபர் தான் நடிகர் சூர்யா.

இவர் தற்போது வணங்கான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இயக்குநர் சிவா இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல், ரவிக்குமாரின் படம், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படம் என அவருக்கு வரிசைகட்டி படங்கள் நிற்கின்றன.

மேலும் இதைத்தொடர்ந்து சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தனது 2D நிறுவனம் சார்பாக தரமான படங்களையும் தயாரித்து வருகின்றார்.

கடந்த மாதம் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து மிரட்டியிருப்பார்.

இவ்வாறு இருக்கையில் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அத்தோடு , இப்படம் இன்னும் சில மாதங்களால் துவங்கும் என எண்ணிய நிலையில் தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் ஒரு வருடத்திற்கும் மேலாவது ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.காரணம், சூர்யாவின் கைவசம் உள்ள படங்கள் தான் என்றும், அதில் சில படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா முடிவெடுத்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.

அதே போல் மறுபுறம் இயக்குனர் வெற்றிமாறனுக்கு தன்னுடைய விடுதலை படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேளைகளில் பிசியாக இருப்பதால், கண்டிப்பாக வாடிவாசல் படத்தை இயக்க இன்னும் சில மாதங்கள் ஆகுமென கூறப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில் , வாடிவாசல் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சூர்யா ரூ. 28 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement