• Sep 21 2024

நடிகர் விஜய் சேதுபதி சீரியலில் நடித்துள்ளாரா..அதுவும் எந்த சீரியல் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்

இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.

விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர் படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.அதாவது இவர் ஒரு சீரியலில் நடித்துள்ளார் என்ற தகவலே.

அதாவது இவர் சன்டிவியில் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பெண் மெகா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் .இந்த விசயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement