• Nov 14 2024

நடிகை எமி ஜாக்சன் பிளாஸ்டிக் சேர்ஜரி செய்துள்ளாரா?- அவரே கூறிய தகவல்- அடப்பாவமே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை எமி ஜாக்சன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானார். 

விஜய் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில், காதலை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.


தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், உதயநிதி, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து 2.O, தெறி, ஐ, தங்கமகன், கெத்து, தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள எமி ஜாக்சன், தமிழ் நடிகையாகவே கொண்டாடப்பட்டார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் எமி ஜாக்சன்.

ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையை பெற்றுக்கொண்டார். பின் காதலருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததை அடுத்து, எமி ஜாக்சன் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை இரண்டு ஆண்டாக காதலித்து வருகிறார்.


ஹாலிவுட்டில் படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன், அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார்.இதனால் ரசிகர்கள் படுமோசமாக விமர்சித்திருந்தனர். இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எமிஜாக்சன் கூறியதாவது

நான் ஒரு நடிகை, என்னுடைய வேலையை நான் செய்கிறேன். கடந்த மாதம் என்னுடைய புதிய படத்துக்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. அந்தப் படத்துக்காக என்னுடைய உடல் எடையை குறைத்து முழுவதுமாக அந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

இதனை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? பிளாஸ்டிக் சர்ஜரி தவறாகி விட்டதா..? கண்றாவியா இருக்கிறார் என்று பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. நடிகர்கள் பலரும் படத்திற்காக தங்கள் உடல் எடையை குறைக்கிறார்கள், தங்களுடைய தோற்றத்தையே மாற்றிக்கொண்டால் பாராட்டுகிறீர்கள்.


ஆனால், நடிகை செய்தால் இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் முகம் கோரமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். இது எனக்கு வேதனையை தருகிறது. படத்திற்காகத்தான் நான் இப்படி மாறி இருக்கிறேனே தவிர, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்று நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement