• Nov 14 2024

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர் கொண்டாவை பிரேக் அப் செய்து விட்டாரா?- இதற்கு இந்த நடிகர் தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர்  நடிகர் விஜய் தேவர்கொண்டாவை காதலித்து வருகிறார் என நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்ற புகைப்படங்களும் வைரல் ஆகின. 


ஆனால் ராஷ்மிகா இது பற்றி வெளிப்படையாக எதுவும் வாய் திறக்கவில்லை.இந்நிலையில் தற்போது விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என ஒரு செய்தி பரவி வருகிறது. அதற்கு காரணம் ராஷ்மிகா சமீப காலமாக இன்னொரு பிரபல நடிகர் உடன் தான் பொது இடங்களுக்கு வருகிறார்.


அதை பார்த்தவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்க தொடங்கி இருக்கிறார்கள். அதனால் ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டாவை பிரேக்கப் செய்துவிட்டார் என தகவல் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement