• Nov 10 2024

யசோதா படத்திற்காக நடிகை சமந்தா இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர வெப் சீரியல்கள் மற்றும் விளம்பரங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.

இவரது நடிப்பில் தற்பொழுது யசோதா சகுந்தலம் குஷி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில்  யசோதா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக சமந்தா நடித்துள்ளார்.


அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்.இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சமந்தா ரூ. 2.5 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது கமிட்டாகி வரும் படங்களுக்கு ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சமந்தா சம்பளமாக வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். நடிப்பைத் தாண்டி உடற்பயிற்சி செய்வதிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement