• Sep 20 2024

நடிகை ஸ்ரேயாவின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா?-ஒரே மாதிரியான உடை அணிந்து ஜோடியாக ஜொலிக்கின்றார்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

எனக்கு 20 உனக்கு 18 என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஸ்ரேயா சரண்.இவர் இதனைத் தொடர்ந்து மழை என்னும் படத்தில் கதாநாயகியா நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து  திருவிளையாடல் ஆரம்பம்,  சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி,  ஜக்குபாய், என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையுடனான அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.


தற்போது தனது 1 வயது மகள் ராதாவுடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ள இந்த தம்பதிகள் அங்குள்ள சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பபகிர்ந்துள்ளனர்.. அந்த புகைப்படங்களில் தாயும் மகளும் ஒரே மாதிரியான உடை அணிந்து ஜோடியாக மிளிர்கின்றனர்.


இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதையும் காணலாம். 




Advertisement

Advertisement