• Sep 21 2024

அடடே இயக்குநர் வெற்றிமாறன் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கின்றாரா?- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் வெற்றிமாறன்.இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அறிமுகப்படமே இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றுக் கொடுத்தது.

இதனை அடுத்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கியிருந்தார்.தொடர்ந்து விசாரனை, வடசென்னை, அசுரன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளது.



இந்த நிலையில் தற்பொழுது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.விரைவில் இப்படம் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.


 இயக்குநர் வெற்றிமாறன் இயக்குநராவதற்கு முன் காதல் வைரஸ் எனும் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இப்படத்தை கதிர் இயக்கியிருந்தார். அப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடித்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement