• Sep 20 2024

ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்து 47வது வருடங்கள் ஆகி விட்டனவா?- வீட்டில் சிம்பிளாக கொண்டாடிய ஐஸ்வர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ரஜினிகாந்த்.இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதோடு இவர் தற்பொழுது தனது 169வது படமான ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 70 பிளஸ் வயதிலும் இன்னமும் அதே எனர்ஜி மற்றும் ஸ்டைலுடன் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் ரஜினி சினிமாவிற்கு வந்து 47 ஆண்டுகளை பூர்த்தி செய்ததை இன்றைய தினம் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


அந்த வகையில் ரஜினி தனது 47வது பூர்த்தி விழாவை தனது குடும்பத்துடன் வீட்டில் சிம்பிளாகக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement