பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் ரூ. 75 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சீசனில் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றக்க போவதாக கூறப்படுகிறது. வ
இந்நிலையில், இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்காக கமல் ஹாசன் ரூ. 55 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக ஆர்வமாக காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Listen News!