• Nov 10 2024

சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட கமல்ஹாசன் இத்தனை விஷயங்களை கூறியிருக்கிறாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ல் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட்டாகி வருகின்ற திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அளவில்லாமல் வசூல் மழையில் தத்தளித்து வருகின்றது.

இந்நிலையில் திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் நோக்கில் நேற்றைய தினம் சென்னையில் விக்ரம் படத்திற்கான சக்சஸ் மீட் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் பேசிய விடயங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது அந்த வகையில் அவர் பேசிய விஷயங்கள் பற்றி நோக்கலாம்,

ஒரு படத்தின் வெற்றிக்கு ஒரு ஆள் தான் காரணம் என கூற முடியாது, நடிப்புக்கு என்னை அழைத்து வந்த பாலச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. இந்த பத்து வருஷத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியான என் படம் இதுதான். அதற்கு பலரும் துணை நின்றார்கள். சின்னத்திரைக்கு சென்ற போது பலரும் சொன்னார்கள், ஆனால் நான் சுதாரித்துக்கொண்டு அங்கு சென்றதன் விளைவு எல்லோர் வீட்டிலும் சென்று சேர்ந்தேன். அப்படிப் பார்த்தால் நான் புரமோஷனை அப்போது ஆரம்பித்து விட்டேன் அது விக்ரம் படத்துக்காக என்பது பிறகு முடிவானது.

பெஸ்டிவல் தினத்தில் படத்தை வெளியிடுங்கள் இல்லை ரிலீஸை பெஸ்டிவல் ஆக்குங்கள் என்றார் அன்புச்செழியன்.படத்தை பெஸ்டிவல் போல கொண்டாடி இருக்கிறார்கள் மக்கள். நல்ல படத்தை ரசிகர்கள் விட்டுவிட மாட்டார்கள் அந்த நல்ல படம் என்ன என்பதை கற்றுக் கொண்டு வந்திருக்கிறார் லோகேஷ், கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் ஆசிரியராக மாற வேண்டும் இதை நிறைய பேருக்கு கற்றுக்கொடுங்கள்.

அனிருத் பற்றி என்ன சொல்வது தனியாகப் பார்த்தால் காலேஜுக்கு போகலையா என்று கேட்பார்கள் ஆனால் இசையால் மிரட்டுகிறார். இப்படிப் பலர் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

உதயநிதியை தனியாக பாராட்ட வேண்டும் என்று அவரிடம் இல்லை நேராக அப்பாவிடமே கூறினேன் 75 கோடி ஷேர் வரும் என்று உண்மையை யாரும் கூற மாட்டார்கள். அந்த நேர்மை படத்தை வெற்றி ஆகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸிற்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால், இதை தொடர்ந்து நீங்கள் செய்யவேண்டும்.

விமர்சகர்கள் எல்லோருக்கும் நன்றி எங்களை செதுக்கும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறோம். கிண்டலுக்காக விமர்சனம்செய்பவர்களை பதிலுக்கு கிண்டல் செய்வது கூட நேர விரயம் என கருதுகிறேன்" என கூறினார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement