• Nov 14 2024

கோப்ரா படத்திற்காக கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்திய நடிகையாகவும், மாடலாகவும் இருக்கும் இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர்.

இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016 பட்டத்தை தட்டி சென்றார். மேலும், மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுவென்றார்.

28 வயதாகும் இவருக்கு கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகியவை சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகைகளை விட அதிகமான சம்பளமாகும்.கோப்ரா திரைப்படத்தில் 7 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் அந்த அனைத்து கதாபாத்திரத்துக்கும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக டப்பிங்கிலும் வித்தியாசம் காட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement