• Sep 21 2024

சரவணன் மீனாட்சி பிரபலம் நடிகர் விஜய்யை பேட்டி எடுத்திருக்கின்றாரா?- அடடே இவரும் சூப்பர் நடிகராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகத் திகழ்ந்து வருபவர் தளபதி விஜய் மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து இவர் நடித்த பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்புக் காணப்பட்டது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியினைப் பெறவில்லை.

இருப்பினும் அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் இவருடைய 66வது படமாகும்.


இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எகிறி உள்ளது. இதனை அடுத்து  விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திரைக்கதை பணியில் மும்மரமாக  லோகேஷ் ஈடுபட்டு வருகின்றார்..

இந்நிலையில் விஜய்யின் எந்தஒரு அன்சீன் புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்களிடையே வைரலாவது வழக்கம். அப்படி  சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட விஜய் டிவி சீரியலில்களில் நடித்து பிரபலமானவர் செந்தில். அவர் ரேடியோவில் பணிபுரிந்த போது விஜய்யை பேட்டியெடுத்துள்ளார்.


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதனை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement