செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் கட்டா குஸ்தி. இப்படத்தை தெலுங்கு நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது.
தமிழில் கட்டா குஸ்தி, தெலுங்கில் மட்டி குஸ்தி என்கிற பெயரில் ரிலீசான இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார்.
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பட வெற்றியை தொடர்ந்து குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய விஷ்ணு விஷால் இப்படம் 30 கோடிiய வசூலித்துள்ளதாக ஓபனாக பேசியுள்ளார்.இதற்கு இன்னும் வியாபாரம் உள்ளது என தெரிவித்தார். இதனால் தற்போது ஒன்பது திரைப்படங்கள் கையில் உள்ளன. இது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், இந்த வருடம் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் எனக்கு வெற்றியை கொடுத்துள்ளன.இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் என்னுடைய மேலாளர் தங்கதுரைதான் இந்தப் படம் நன்றாக இருக்கும் உனக்கு, நிச்சயம் நடிக்கலாம் என்று கூறினார். அது தற்போது நடந்துள்ளது என தெரிவித்தார்.
Listen News!