இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆவார். இவர் தற்போது தனது கட்சியினருக்கு கூறிய கட்டளையானது பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
தமிழ் நாட்டில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கதில் 'கோட்' படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சி உறுப்பினருக்கு சில கட்டளைகளை பிறப்பித்தது உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர்கள் எவரும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க கூடாது என்றும் , வேறு கட்சிகள் தொடர்பாக இணையத்தில் பகிர கூடாது, பிரச்சாரம் செய்யக் கூடாது, கொடிகளை தூக்கிக் கொண்டு செல்லக் கூடாது என்றும் புரூஸ்லீ ஆனந்த் கூறியுள்ளாராம்.
குறித்த கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி, ஒரு சில நாட்களில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விஜய்யின் கட்சியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது கட்சி ஆப்பை நிறுத்தி வைத்து, உறுப்பினர்கள் களப்பணியில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. குறித்த தேர்தலில் தங்களது கட்சி போட்டியிடப்போவதில்லை என்று விஜய் அறிவித்திருந்தாலும், இது வரையில் கட்சி சம்பந்தமாக எந்த தகவலையும் வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறான நிலையில், விஜய் அவரது உறுப்பினர்களை வாக்களிக்க கூடாது என்று தூண்டுகிறாரா? வாக்களிப்பது மக்களின் கடமை ஆகும். கட்டாயமாக வாக்களிக்க வேண்டும், ஆனாலும் விஜய் தனது கட்சியை தவறாக வழிநடத்துகிறார் என்று பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இதேவேளை, நடிகர் விஜய்யும் கோட் படபிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ளார். இவ்வாறு இருக்கையில் அவர் வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.
Listen News!