• Nov 10 2024

அட இவங்க இதுவரை விஜய்க்கு அம்மாவாக நடித்தது இல்லையா?- சூப்பர் நடிகையாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான சரண்யா பொன்வண்ணன் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் தன்மை கொண்டவர் .

குணச்சித்திர வேடங்களிலும் பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வடிவத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் சிறந்த அன்னையாக நடித்து வருகிறார் சரண்யா. சூர்யா, கார்த்தி, தனுஷ்,விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றி வசூலை அடுத்து நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் டைட்டில் ஜூன் 22 விஜய் பிறந்த நாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகின்றார். மேலும் ,படத்தில் சரத்குமார். குஷ்பு.பிரகாஷ் ராஜ். பிரபு. ஸ்ரீகாந்த். யோகி பாபு ஆகிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் நடிகை ஜெயசுதா அம்மாவாக நடிக்கிறார்.

எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் தன்மை கொண்டவர் நடிகை சரண்யா இதுவரை விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்திலும் நடித்ததில்லை. சரண்யா விஜய்க்கு அம்மாவாக நடித்தால் சூப்பராக இருக்கும். இனி வரும் காலங்களிலாவது இது சாத்தியமாகும் என ரசிகர்களால் நம்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement