அட்லீ இயக்கத்தில் வெளியாகவுள்ள ஜவான் திரைப்படத்தில் விஜய் ஒரு முக்கிய இடத்தில் நடிக்க இருந்த நேரத்தில் அவரின் லியோ பிசியால் நடிக்கமுடியாது என்று கூறி இருந்தார்.
விஜய்க்கு நிகரான மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனை அட்லீ நடிக கேட்டிருந்தார். அவரும் சம்மதித்தார் என்று ஒரு பேச்சும் காணப்பட்டது. இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் ஷாருக்கான் நடித்திருக்கிறார்.
ஜவான் படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும் தனது படம் ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காகவும் ஷாருக்கான் நேரடியாக அல்லு அர்ஜுனை சந்திக்க சென்றிருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் சென்று கேட்டால் அல்லு அர்ஜுன் நிச்சயமாக நடிப்பார் என்பதும் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் கலக்கி விட்டார். அதேபோல ஜவான் படத்தில் இவர் நடித்தால் படம் எங்கேயோ போய் விடும் என்பதே இதன் நோக்கமாக இருக்கலாம்.
Listen News!