• Nov 10 2024

பாண்டியன் ஸ்டோரில் இதை கவனிச்சீங்களா? இப்படி ஒரு சொதப்பலா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.மேலும்  இந்த சீரியலில் ஜீவா வீட்டை விட்டு வெளியேறும் போது அதிகமான ரசிகர்கள் அந்த முடிவை பாராட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்தது என்றால் கண்ணன் ஐஸ்வர்யா கஷ்டப்பட வேண்டும் என்பதுதான்.

பாண்டியன் ஸ்டோர் கூட்டு குடும்பம் உடைபட்ட நேரத்தில் அதிகமான ரசிகர்கள் பாராட்டி வந்ததன் விளைவாகவே அந்த எபிசோடுகளும் வேற லெவலில் பிரபலமடைந்தது. எனினும் அதை தொடர்ந்து தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கஷ்டப்படும் எபிசோடுகள் வந்து கொண்டிருக்கிறது அதாவது வரவுக்கு மீறி செலவு செய்ய ஐஸ்வர்யா தனக்கு கிடைத்த கிரெடிட் கார்டு மூலமாக கடன் வாங்கி வைத்துவிட்டு அந்த பில்லை கட்டாமல் நாட்களை கடத்தி வந்தார்.

இவ்வாறுஇருக்கையில் பேங்க் ஆபீசர் தவனை மேல் தவனை கொடுத்து பார்த்து அதற்கு ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் பணத்தை கொடுக்காத போது பேங்க் ஆபீஸை வீட்டில் வீட்டில் இருக்கும் பொருட்களை தூக்கிக்கொண்டு செல்லவா? அல்லது ஐஸ்வர்யாவை தூக்கிக் கொண்டு போகவா என்று மிரட்டி இருந்தனர். அதனால் கண்ணன் அவர்களை கோபப்பட்டு அடிக்க அவர்கள் திருப்பி கண்ணனை அடித்து விட்டு சென்றுவிடுகிறார்கள்.

அத்தோடு கண்ணனுக்கு ஆதரவாக கதிர் பேங்க் ஆபிஸர்களை அடித்ததால் அவர்கள் கொடுத்த கம்ப்ளைன்டால் கதிர் போலீசில் கைது செய்யப்பட  உள்ளார். இதனால் வளைகாப்பு இனி நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகின்றது. இவ்வாறுஇருக்கையில் இந்த சீரியலில் சொதப்பல்கள் குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பேங்கில் கவர்ன்மெண்ட் வேலை பார்க்கும் கண்ணனுக்கு கிரெடிட் கார்டு வரைமுறை பற்றி எதுவுமே தெரியவில்லை. இது நம்பற மாதிரியா இருக்கு என்று ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்.

ஏற்கனவே கண்ணன் வேலைக்கு சேர்ந்தது குறித்து அதிகமாக ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருந்தனர். இவ்வாறுஇருக்கையில்  தற்போது கண்ணன் கலெக்சன் ஏஜென்சியில்தான் உள்ளார்.ஆனால் அவருக்கு கிரெடிட் கார்டு பத்தி தெரியவில்லை. கலெக்ஷன் வாங்க வருபவர்களை பற்றி எந்த தகவல்களும் தெரியவில்லை .அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூடவா தெரியாது.

பொதுவாக பேங்க் ரூல்ஸ் படி வீட்டில் பங்க்ஷன் நடக்கும் போது கடன் வசூலிக்க செல்லக்கூடாது. அத்தோடு துக்க நிகழ்வுகளின் போதும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது. அதுபோல இரவு 7 மணிக்கு மேலே வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு நேரில் சென்று தொந்தரவு கொடுக்கக் கூடாது. இத்தனை ப்ராசஸ் இருக்கும்போது இதுவெல்லாம் தெரியாமல் இந்த சீரியலில் கதை எழுதி கொண்டிருக்கிறார்களா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Advertisement