• Nov 15 2024

நடிகர் ஜெயம் ரவியின் அம்மா மற்றும் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?-சூப்பராக நடந்த கொண்டாட்டம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான்  ஜெயம் ரவி. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தவர். இவர் நடிப்பில் வெளியான தனிஒருவன் கோமாளி போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

மேலும் இவர் அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் தாய் மற்றும் தந்தை தங்களின் 50-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதற்காக ஒட்டுமொத்த குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜெயம் ரவி அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவரின் அண்ணன் மோகன் ராஜா, 50 வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமணமான அதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படம் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement