தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் சசிகுமார். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இது தவிர தற்பொழுது பல திரைப்படங்களை தயாரித்தும் வருகின்றார்.
இவரது முதற்படம் சுப்பிரமணியபுரம் ஆகும். இப்படம் 2008ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இப்படம் அவருக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்ததால் அதன்பிறகு நடிகராக நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவரது சொந்த ஊர், வீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சசிகுமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் இருக்கும் தாமரைப்பட்டி தான். விவசாய குடும்பத்தை சேர்ந்த சசிகுமாருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.
இவருக்கு சொந்த ஊரில் ஒரு ஓட்டு வீடும், ஒரு மாடி வீடும் இருந்துள்ளது. அதனை இப்போது இடித்துவிட்டு புதிய பெரிய வீடு ஒன்று கட்டிக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ராயப்பனை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்-செஞ்சிட்டா போச்சு என பதிவிட்ட இயக்குநர் அட்லி
- சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8 இல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்-இந்த வாரம் பட்டைய கிளப்ப போகுது
- சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை-பிரபல தயாரிப்பாளர்
- சர்தார் திரைப்பட உரிமையைக் கைப் பற்றிய பிரபல தொலைக்காட்சி – முதலில் ஓடிடியில் தான் படம் ரிலீஸ் ஆகுமாம்
- தளபதி 67 திரைப்படம் எப்படி இருக்கும்? சூப்பர் பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!
- மஞ்சள் நிற சேலையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்…ரீசன்ட் போட்டோசூட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!