தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்பொழுது நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்து அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.இதற்கான ப்ரமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த செய்தி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இருப்பினும் இதற்கு சிவகார்த்திகேயனின் மனைவி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது "சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர். டீசண்டான மனிதர். எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாது என்று அவர் சமாதானம் பேச வந்தார்.இமானின் விவாகரத்து முடிவை ஏற்காமல் நியாயத்தின் பக்கம் சிவகார்த்திகேயன் நின்றதை துரோகம் என்று இமான் சொன்னதாக நினைக்கிறேன்." என்று சிவகார்த்திகேயன் சார்பாக தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சினை ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அக்காவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!