தமிழ் சினிமாவில் நல்ல கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் முக்கியமான நடிகராக வலம் வருகின்றார் சூர்யா.காதல் நாயகனாக ஆரம்பத்தில் வலம் வந்த இவர் தற்பொழுது ஆக்ஷ்ன் ஹீரோவாக மாறி இருப்பது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அந்த வகையில் அடுத்தடுத்து வாடிவாசல் வணங்கான் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் புதிய படம் போன்றவற்றில் நடித்து வருகின்றார். இப்படங்கள் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று படங்களில் எது அடுத்ததாக ரிலீஸாகும் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகிய காதல் திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற சூர்யாவின் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.இந்நிலையில், இப்படத்தின் முதல் பேப்பர் விளம்பர புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.இதுவரை வாரணம் ஆயிரம் படத்தில் பலரும் பார்த்திராத ஒரு லுக்கில் நடிகர் சூர்யா இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!