தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த ஆடவன் கட்டளை, கோலமாவு கோகிலா, மண்டேலா, டாக்டர், லவ் டுடே போன்ற படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.மேலும் கடந்த 14ஆம் தேதி மாவீரன் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
அடுத்ததாக ஜெயிலர், ஜவான், கங்குவா, LGM என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் யோகி பாபுவின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் கழுத்தில் மெடல், கையில் கோப்பை மற்றும் சான்றிதழுடன் இருக்கிறார் யோகி பாபு. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Listen News!