• Nov 19 2024

நடிகை காஜல் அகர்வாலின் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இப்படத்தினைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக்கள் குவிந்தால் தெலுங்கு நடிகரான ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய், விஷால், தனுஷ் ,ஜெயம் ரவி ,சூர்யா ,கார்த்தி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் மகேஷ்பாபு, ராம்சரண், நானி எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சிலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

மேலும் இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.அதே போல் தந்தையர் தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனால் தனது தந்தையுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement