• Nov 14 2024

நடிகை மைனா நந்தினியின் பெற்றோரைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே அவங்க வீட்டில் இன்று நடைபெறும் விஷேசம் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகை மைனா நந்தினி தனது பெற்றோரின் புகைப்படத்தை பதிவிட்டு திருமண நல்வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில சரவணன் மீனாட்சி என்னம் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் மைனா நந்தினி. இந்த சீரியல் மூலம் காமெடி நடிகையாக அறியப்பட்ட இவர் தொடர்ந்து பல சீரியல்களிலும் மேடை நிகழை்ச்சிகளிலும் பங்குபற்றி வந்தார்.


தொடர்ந்து தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்த இவர் கலக்கப் போவது யாரு ,டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் ரி என்ரி கொடுத்து தற்பொழுது சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வலம் வருகின்றார்.


இது தவிர விக்ரம் ,நம்ம வீட்டுப்பிள்ளை ,விருமன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இன்று இவரது அம்மா அப்பா திருமண நாளைக் கொண்டாடுவதால் அவர்களுடைய புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாமும் தமது திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவகின்றனர். மேலும் மைனா நடிகர் லோகேஷ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement