தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நமிதா. எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடந்து தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.
இவர் ரசிகர்களை மச்சான்ஸ் என செல்லமாக அழைத்து பிரபல்யமானார்.என்ன நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஹாய் மச்சான்ஸ் என்று அவர் கூறும் போது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும் உண்டு. மேலும் உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்புக்கள் இவருக்கு குறைய ஆரம்பித்தது.
இதனை அடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதனை அடுத்து வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இந்த வருடம் தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.
தற்போது தனது குழந்தைகளை வைத்து நடிகை நமீதா அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!