• Nov 19 2024

ADKவின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா? வெளியானது சூப்பர் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

2012ம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற இசை ஆல்பம் மூலம் பிரபலம் ஆனவர் தினேஷ் கனகரத்தினம். இவர் விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான ஆத்திச்சூடி என்ற பாடல் மூலம் தனது முதல் சினிமா பாடலை பாடி உள்ளார்.

இவர் ராப் பாடகரான இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார்.அவரே பாடல் வரிகளை எழுதி அதை ராப் இசையில் பாடுவார். இலங்கையை சேர்ந்த இவர் பல தமிழ் படங்களில் ராப் பாடலை பாடியுள்ளார். அத்தோடு குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார். 


அதன்பின்னர், டி.இமான், ஏ.ஆர் ரகுமான், சந்தோஷ் நாராயணன், ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற பல  இசையமைப்பாளர்கள் இசையிலும் ஆர்யன் தினேஷ் பாடி கலக்கியுள்ளார். தனியாகவும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.


இப்போது பிக்பாஸிலும் சூப்பராக  தனித்தன்மையுடன் விளையாடிக் கொண்டு வருகிறார்.


தினேஷ் கனகரத்தினம் ஜேஸ்மின் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் தினேஷ் சில காரணங்களால் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என கூறியுள்ளார்.

எனினும் தற்போது தினேஷ் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement