• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் மகனைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே இவ்வளவு பெரிய மகனா இவருக்கு?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ரேஷ்மா.இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள முதல் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

 அதிலும் குறிப்பாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.


தொர்ந்து பிக்பாஸிற்குப் பிறகு தான் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்ததோடு சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.அதன்படி விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் இந்த சீரியலில் ஒரே வில்லியாக அவர் நடித்து வருகிறார்.தற்போது ரேஷ்மா அவரது மகன் ராகுல் போட்டோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என பலரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement