• Sep 20 2024

பிக்பாஸ் அர்ச்சனாவின் பெற்றோரைப் பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய குடும்ப போட்டோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் அர்ச்சனா என்ற வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். இதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.

 மாயா மற்றும் பூர்ணிமா டீமிற்கு அர்ச்சனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இதனால், கமல்ஹாசன் வரும் நாட்களில் ரசிகர்களிடம்இருந்து அர்ச்சனாவுக்கு தொடர்ந்து கைதட்டல்கள் கிடைத்து வந்தது. 


ஆனால், கடந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே நடந்த மோதலில் கமல்ஹாசன் பெரும்பாலும் நிக்சனுக்கு தான் சப்போர்ட் செய்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனாவை கமல் சரியாக பேசவிடவில்லை என அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் ஆகியோரை தான் கமல் சற்று கடுமையாக கண்டித்திருந்தார் 


 இப்படி ஒரு பக்கம் அர்ச்சனாவுக்கு ஆதரவு ஒரு பக்கம் பெருகிக் கொண்டு இருக்க, அர்ச்சனாவின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement