தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சென்ராயன். இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலமே பிரபல்யமானவர்.
இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இது தவிர ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.அதுவும் இவர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் வில்லனாக நடித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டது பெரும் பிரபலமானது.மேலும், திருமணம் முடிந்து இவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை. அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார்.
பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே அவர் மனைவி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்ன போது ‘நான் அப்பா ஆகிட்டேன் டா ‘ என்று ஆனந்த கண்ணீரில் கதறி அழுதது பலரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
அதனைத் தொடர்ந்து இவருக்கு சில ஆண்டுகளுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது.அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற சென்றாயன், அவருக்கு செம்பியன் என்று பெயரை வைத்து இருக்கிறேன் என்று கூறி இருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இறுதியாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன் இரண்டு மகன்களை அழைத்து வந்து இருந்தார் சென்ராயன். இப்படி ஒரு நிலையில் சென்ராயன் தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறதைக் காணலாம்.
பிற செய்திகள்
- இதிலேயே உங்கள் ரியல் குணம் தெரிந்து விட்டது- நாகசைத்தன்யாவைப் பாராட்டி சமந்தாவை விளாசும் நெட்டிசன்கள்
- மெலடியில் இருக்கும் இனிமை இன்றைய ரசிகர்களுக்குப் புரியவில்லை- கவலை தெரிவித்த எஸ்.பி.பி. சரண்
- ரித்திக் ரோஷன் கட்டாயம் இரண்டாவது திருமணம் செய்வார்- ஜோதிடர் சொன்ன ரகசியம் – மணப் பெண் யார் தெரியுமா?
- “ரூம் போட்டு யோசிப்பாங்களோ?- தன்னுடைய பாட்டை கிண்டல் செய்தவர்களுக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி
- அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் கிடைத்த கௌரவம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!