• Sep 21 2024

பிக்பாஸ் தாமரையின் அக்காவாவை பார்த்துள்ளீர்களா..? அதுவும் விஜய்டிவியிலா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் மக்களின் ஆதரவு பெருகி உலெகெங்கும் உள்ள அனைத்து ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்பட்டது.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமாக ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியாக 5வது சீசனும் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடத்தே அதிக வரவேற்ப்பு பெற்றவர் தான் தாமரை. அவர் மிகவும் கஷ்டப்பட்டவர் நிகழ்ச்சி மூலம் பெரிய இடம் பிடிக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்பினார்கள்.

5வது சீசனில் தாமரை வெற்றிபெறவில்லை, அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள், ஆனால் அவரை விட கடுமையாக விளையாடி பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சி பட்டத்தை வென்றுவிட்டார்.

ஆனால் இறுதிக்கட்டம் வரை போராடிய தாமரைக்கு மக்களின் ஆதரவு அதிகம் கிடைத்தது.

தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கணவருடன் சேர்ந்து அசத்தி வருகின்றார்.இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சிக்கு தாமரையின் சகோதரி வருகை தந்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருவதோடு இது தான் தாமரையின் அக்காவா என பலரும் கேட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement