இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார்.
தொடர்ந்து தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள்போன்ற திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி நடிகராக சினிமாவில் கலக்கினார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ரமணா, அசுரன், நரசிம்மா என பல திரைப்படங்கள் நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.
அரசியல் பிரவேசத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட விஜயகாந்த், அதன்பின் உடல்நல குறைவின் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு கூட மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார்.
அத்தோடு மழை பிடிக்காத மனிதன் எனும் படத்தின் மூலம் நடிகர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளிவந்தது. மேலும் அதை அப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் உறுதி செய்தார்.
நடிகர் விஜயகாந்திற்கு ஷண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர். மேலும் இதில், இரண்டாவது மகன் விஜய பிரபாகரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துகொண்ட அழகிய ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
பிற செய்திகள்
- திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- தனுஷின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- நடிகர் பிரித்விராஜின் காதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? உருக்கமான வாழ்த்து…வைரலாகும் ட்வீட்..!
- ரஜினிகாந்த் காலில் விழுந்த மாதவன்-வைரலாகும் வீடியோ..!
- பிரபல இளம் நடிகர் அகால மரணம்…இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!