• Nov 14 2024

காமெடி நடிகை மதுமிதாவின் குழந்தையைப் பார்த்திருக்கின்றீர்களா?- வாவ் கியூட் பேபி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆண்கள் காமெடியில் ஸ்கோர் செய்து முன்னணியில் வலம் வருவது சாதாரண விடயம். ஆனால் பெண்கள் காமெடியில் கலக்க வேண்டும் என்றால் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என்பதே தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அந்த வகையில் நடிகர் உதயநிதி மற்றும் ஹன்சிகா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில்  ஜாங்கிரி என்னுனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் மதுமிதா.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


விஜய் டிவி நடத்தும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். ஆனால் போட்டியாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.இறுதியாக விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடித்த ‘அனபெல் சேதுபதி’ படத்தில் நடித்து இருந்தார்.


இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் ஜாங்கிரி மதுமிதாவுக்கு திருமணம் ஆகி தற்போது குழந்தை பிறந்தது. ஆனால் இதுவரைக்குமே தன் குழந்தை புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த ஜாங்கிரி மதுமிதா சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வர்ணத்தில் தனது குழந்தைக்கு ஆடை அணிவித்து அருமையான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.



Advertisement

Advertisement