• Sep 20 2024

தேவயானியின் தம்பிகள் இருவரையும் பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காதல் கோட்டை, சூர்யவம்சாம், நீ வருவாய் என உள்பட 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.



தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். எனினும் குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. தற்போதும் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது பது அர்த்தங்கள் எனும் சீரியலில் நடித்து வரும் தேவயானி, அவ்வப்போது பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

தேவயானி உடல் பிறந்த இரண்டு சகோதரர்கள் உள்ளார்கள், அதில் நகுல் சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார். இயக்குநர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

தற்போது தேவயானி தனது இளம் வயதில் தம்பிகள் மற்றும் அம்மாவுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.




Advertisement

Advertisement