கௌதம் வாசுதேவ் மேனன் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.மேலும் இவர் தனது தமிழ்ப் படங்களின் மறு ஆக்கங்களாக தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார்.
மேலும் இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
கௌதம் தனது போட்டான் கதாசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். மேலும், அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றியைப்பெற்றது. அடுத்ததாக குயின் 2 வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.
நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமாவின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் தனது மனைவி மற்றும் துணை இயக்குனர்களுடன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Listen News!