சூது கவ்வும், வாயை மூடி பேசவும், டிமாண்டி காலனி, ஒரு நாள் கூத்து, காக்கா முட்டை, காலா, டிக் டிக் டிக், குட் நைட் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ரமேஷ் திலக்.
இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பு எல்லாம் எனக்கு வராது என்று நினைத்து வானொலித் தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போது அவருக்கு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தோட்டா என்ன விலை என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து சினிமாவிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் தற்பொழுது வரை அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார்.இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆர் ஜே நவலெட்சுமியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்க ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.அண்மையில் தனது மனைவி, மகனுடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலம்.
Listen News!