• Nov 14 2024

தொகுப்பாளினி ப்ரியங்காவின் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீசன்களைக் கடந்தும் ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் களமிறங்கியவர் தான் ப்ரியங்கா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதன்பின், கிங்ஸ் ஆப் டான்ஸ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்த ப்ரியங்கா தற்போது, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தொகுப்பாளினி ப்ரியங்கா சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement